header ads

News Ticker

Latest Posts
Browsing Category "puthinamtop"

வெடிக்­காத குண்­டு­க­ளி­லி­ருந்து வெடித்த தக­வல்கள்

- 1 Comment
இரண்டாம் உலக யுத்த கால குண்டு ஒன்று ேஜர்மனிய நக­ரான லூட்­விக்ஸ்­பானில் கடந்த வாரம் கண்டு பிடிக்­கப்­பட்­டது. இந்த குண்டைச் செய­லி­ழக்கச் செய்­வ­தற்­காக அவ்­வூ­ரி­லுள்ள மக்கள் 18,500 பேரை அதி­கா­ரிகள் வெளி­யேற்­றி­னார்கள்.
கட்­டு­மானப் பணி­களில் ஈடு­பட்­டி­ருந்த தொழிலா­ளர்கள் சில­ரினால் இக் குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­பி­ர­தே­சத்தில் இரண்டாம் உலக யுத்­தத்தின் போது நேச நாடு­களின் வான் வழித் தாக்­கு­தல்­களின் போது வீசப்­பட்ட மேலும் வெடிக்­காத குண்­டுகள் இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது. சுமார் எழு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வீசப்­பட்­ட­தாக கணிக்­கப்­பட்டுள்ள இக்­குண்டு 1,100 இறாத்தல் நிறை­யு­டை­ய­தாகக் காணப்­பட்­டது. குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­படும் பொழுது குண்டு கண்டு பிடிக்கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து ஆயிரம் மீற்றர் சுற்­ற­ள­வுக்குள் (0.6 மைல்) உள்ளோர் காலை எட்டு மணிக்குள்(0600 GMT) வெளி­யேற வேண்­டு­மென நகர அதி­கா­ரிகள் உத்­த­ர­விட்­டார்கள். குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­ப­டு­வ­தற்கு ஆறு மணித்­தி­யா­லங்கள் செல­விட வேண்­டி­ய­தா­யிற்று.


கட்­டு­மானப் பணி­களின் போது இவ்­வாறு வெடிக்­காத குண்­டுகள் கண்­டு­ பி­டிக்­கப்­ப­டு­வது ஜேர்­மனில் அவ்­வப்­போது நடை­பெறும் ஒரு விட­யமே. இரண்டாம் உலக யுத்­தத்தின் போது நேச நாடுகள் எவ்­வ­ளவு மோச­மாக நாஸிகள் மீது குண்டு மாரி பொழிந்­தார்கள் என்­பதன் வர­லாற்றை இப்­படி அடிக்­கடி கண்­டு­பி­டிக்­கப்­படும் குண்­டுகள் பறை­சாற்­று­கின்­றன.
கடந்த ஆண்டு செப்ெ­டம்­பரில் ஃபிரேங்.ேபார்ட் நகரில் ஒரு பெரிய குண்டு கண்டு பிடிக்கப்­பட்ட போது 70,000 மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள். 1.8 டொன் நிறை­யு­டைய பூதாக­ர­மான அந்த பிரித்­தா­னிய குண்டு "புளொக்­பஸ்டர்' (BLOCKBUSTER) எனப் பெய­ரி­டப்­பட்­டது. அதே போன்று ஏப்­ர­லிலும் பேர்லின் புகை­யி­ரத நிலை­யத்­த­ருகே ஒரு பிரித்­தா­னிய குண்டு கண்டு பிடிக்­கப்­பட்டு மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள்.
பிற்­பகல் இரண்டு மணி­ய­ளவில் 'நல்ல செய்தி. குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்டு விட்­டது. மக்கள் வீடு­க­ளுக்குத் திரும்பி வரலாம்' என்ற செய்­தியை லூட்­விக்ஸ்பான் நகர சபை தன்­னு­டைய உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்­டரில் வெளி­யிட்­டது. அத்­துடன் அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வு­ட­னேயே ஒரு பலகை வண்­டியில் வைத்து கட்­டப்­பட்­டி­ருந்த துருப்­பி­டித்த குண்டின் படத்­தையும் வெளி­யிட்­டி­ருந்­தது.
இந்த குண்டு அமெ­ரிக்­கப்­ப­டை­க­ளினால் வீசப்­பட்­டி­ருக்­கலாம் என்று நம்­பப்­ப­டு­கின்­றது. ஒரு இலட்­சத்து 65 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட லூட்­விக்ஸ்பான் நகரம் தென்­மேற்கு ஜேர்­ம­னியில் ஃபிரேங்ேபார்ட் நக­ரத்­திற்கு 50 மைல் தொலைவில் உள்­ளது.
இரண்­டா­வது உலக யுத்தம் நடந்து எழு­பது ஆண்­டுகள் கடந்து விட்­டன. இன்­னமும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2000 டொன் வெடிக்­காத குண்­டுகள் ஜேர்மனிய மண்­ணி­லி­ருந்து கண்டு பிடிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­ன்றன என்றால் சற்று வியப்­ப­டை­யாமல் இருக்­க­மு­டி­ய­வில்லை.
 ஒரு வீட்டை விரி­வு­ப­டுத்­து­வது முதல், தேசிய புகை­யி­ரத அதி­கா­ர­ச­பை­யினால் ஒரு புகை­யி­ரத பாதை அமைப்­பது வரை எது­வா­னாலும் அந்த மண்­ணி­லி­ருந்து வெடிக்­காத வெடி­பொ­ருட்கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தென சான்று படுத்­தப்­பட வேண்டும். இரண்­டா­வது உலக யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­குதி பூரா­கவும் ஜேர்­ம­னியில் அமைதி நிலவி வரு­கின்ற போதும் ஜேர்­ம­னிய குண்டு அகற்றும் படைகள் தான் உல­கி­லேயே மிகச் சுறு­சு­றுப்­பாக இயங்கி வரு­ப­வையாகும். 2000 ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­வரை 11 தொழி­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இதில் மூவர் 2010 ஆம் ஆண்டு கொட்­டின்ஜென் நகர் சந்தைப் பகு­தியில் ஆயிரம் இறாத்தல் நிறை­யு­டைய ஒரே குண்­டினை செய­லி­ழக்கச் செய்யும் போது கொல்­லப்­பட்­டார்கள்.
1986 ஆம் ஆண்டு முதல் குண்டு செய­லி­ழப்புத் துறையில் பணி­யாற்றி வரும் ஹோர்ஸ்ட் ரெய்ன்ஹார்ட் இது பற்றி சமீ­பத்தில் குறிப்­பிட்ட போது '86 ஆம் ஆண்டு நான் இப்­ப­ணியை ஆரம்­பித்த போது 30 ஆண்­டுகள் கழிந்தும் நான் இப்­ப­ணி­யி­லேயே தொடர்ந்து இருப்பேன் என நினைக்­க­வே­யில்லை. மண்­ணுக்கு அடி­யிலே இன்­னமும் நிறைய குண்­டுகள் மறைந்து கிடக்­கின்­றன என்­பதை மக்கள் சாதா­ர­ண­மாக அறி­யா­தி­ருக்­கின்­றார்கள்" எனத் தெரி­வித்துள்ளார். அவர் சாதா­ர­ண­மாக ஆண்­டொன்­றுக்கு சுமார் 500 டொன் வெடிக்­காத குண்­டு­களை அகழ்ந்­தெ­டுப்­ப­துடன் இரண்டு வாரத்­திற்­கொரு முறை வெடிக்­காத வான்­வழிக் குண்டு ஒன்­றினை செய­லி­ழக்கச் செய்­கின்றார்.
இரண்­டா­வது உலக யுத்­தத்தின் போது 1940 -– 1945 காலப்­ப­கு­தியில் அமெ­ரிக்க மற்றும் பிரித்­தா­னிய வான்­ப­டைகள் 2.7 மில்­லியன் தொன் குண்­டு­களை ஐரோப்­பாவின் மேல் வீசின. இதில் அரை­வா­சிக்கும் அதி­க­மா­னவை ஜேர்­ம­னியின் மேல் வீசப்­பட்­டன. அச்சு நாடுகள் என எடுத்துக் கொண்டால், நேச நாடு­களின் படைகள் 3.4 மில்­லியன் தொன் குண்­டு­களை அச்சு நாடுகள் மேல் வீசின. இந்த குண்­டு­க­ளினால் 3 இலட்­சத்து 5 ஆயிரம் முதல் 6 இலட்சம் பேர் வரை­யி­லான ஜேர்­மா­னி­யர்­களும், 3 இலட்­சத்து 30 ஆயிரம் முதல் 5 இலட்சம் வரை­யி­லான ஜப்­பா­னி­யர்­களும் கொல்­லப்­பட்­டனர். அதே நேரம் அச்சு நாடு­களின் குண்டு வீச்­சுக்­க­ளினால் 60 ஆயி­ரத்து 595 பிரித்­தா­னி­யர்­களும், 67 ஆயி­ரத்து 78 பிரான்­ஸி­யரும் 5 இலட்­சத்­துக்கு அதி­க­மான சோவியத் மக்­களும் கொல்­லப்­பட்­டனர்.
ஆனால் வியட்நாம் யுத்­தத்தின் போது வீசப்­பட்ட குண்­டு­களின் எண்­ணிக்கை நம்மை அசர வைக்கும். வியட்நாம் யுத்தம் முடி­வுறும் வரை வியட்நாம், லாவோஸ், கம்­போ­டியா ஆகிய நாடு­களின் மீது அமெ­ரிக்கா வீசிய குண்­டு­களின் நிறை ஏழு மில்­லியன் தொன்­க­ளாகும். இது இரண்­டா­வது உலக யுத்­தத்தின் போது மொத்­த­மாக வீசிய குண்­டு­களைப் போல இரண்டு மடங்­காகும்.
1940 செப்ெ­டம்பர் ஏழாம் திகதி லஃப்ட்வேஃப் என்ற பெயரில் அழைக்­கப்­பட்ட ஜேர்­ம­னிய வான்­படை லண்டன் மீதும் ஏனைய முக்­கிய பிரித்­தா­னிய நக­ரங்கள் மீதும் ஈவி­ரக்­க­மற்ற குண்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யது. இதுவே இரண்டாம் உலக யுத்­தத்தின் போது நடத்­தப்­பட்ட முதல் குண்டு தாக்­குதல் ஆகும்.
இரண்­டா­வது உலக யுத்­தத்தின் போது குண்டு வீச்­சுத்­தாக்­கு­தல்­க­ளினால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டவை பின்வரும் நகரங்களாகும். அலெப்பொ (சிரியா) பேர்லின் (ஜேர்மனி) வார்ஸோ (போலந்து) ஹீரோஷிமா நாகசாகி (ஜப்பான்) காபுல் (ஆப்கானிஸ்தான்) ஸரஜயெவோ (பொஸ்னியா) டிரேஸ்டன் (ஜேர்மனி) மற்றும் பெய்ரூட் (லெபனான்)
இதில் அலெப்பொ (சிரியா) காபுல் (ஆப்கானிஸ்தான்) ஆகிய நகரங்கள் இன்றளவும் பிச்சினைக்குரிய நகரங்களாகவே இருப்பது அந்நகரங்களின் தலைவிதியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆயுதக் கலாசாரமும் சர்வாதிகாரிகளின் போக்குகளும் மனித குலத்தை எங்கே கொண்டு செல்கின்றன என்ற மௌனச் செய்தியைத்தான் இந்த வெடிக்காத குண்டுகள் விடுப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.

ஆடு வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மன்னார் உதயன்

- No Comments
ஆடு வளர்ப்பு என்பது எம் முன்னோர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வந்திருக்கிறது. வளர்த்த ஆட்டை விற்று முக்கிய பொருளாதார கடமைகளை நிறைவேற்றும் நிலைமையும் இருந்தது.  குடும்பத்தில் உள்ள அனைவருமே ஆடுவளர்ப்பில் அக்கறை செலுத்துவார்கள்.  ஆட்டுப்பால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிக் குடிக்கும் நிலை உள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மிக்கது என அறியப்பட்டது. ஆட்டிறைச்சிக்கு எம்மவர்கள் மத்தியில் என்றுமே தேவை குறைந்ததில்லை. அதுவும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஊருக்கு வர முதலே உறவினர்களிடம் “ஒரு நல்ல கிடாயா பார்த்து வாங்கி வீட்டை கட்டி வையுங்கோ! வருகிறோம்” என இரண்டு மாதங்களுக்கு முன்பே  சொல்லுகின்ற நிலையும் உள்ளது. இதன் மூலம் எங்கள் பிரதேசங்களில் ஆடுகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆட்டெருவும் உடனடியாக விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகும்.   





மன்னார் மாவட்டத்தின் பரப்பாக்கண்டல் பிரதேசத்தில் உள்ள காத்தான்குளம் கிராமசேவகர் பிரிவில் பிரதான வீதியில் இருந்து உள்ளே சென்றால் "நம்பிக்கை பண்ணை" எல்லோரையும் வரவேற்கின்றது. கட்டுக்கரை குளத்துக்கு அண்மையில் (சின்ன அடைப்பு துருசு) க்கு அண்மையாக இப்பண்ணை அமைந்துள்ளது. 

பெயருக்கு ஏற்றால் போல் குறித்த பண்ணை நமக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கின்றது. உதயன் என்பவர் இந்தப் பண்ணையை நிர்வகித்து வருகின்றார். கிறிஸ்தவ  தொண்டு நிறுவனம் ஒன்றும் இந்தப் பண்ணையின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

எதற்காக இப்படி ஒரு பண்ணை எனக் கேட்ட போது உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார் உதயன்.  தற்போது நம்பிக்கை பண்ணை அமைந்துள்ள ஏறக் குறைய 4 ஏக்கர் காணி என் அப்பா அன்பளிப்பாக எனக்கு தந்திருந்தால் .  2009 யுத்தம் முடிவுற்ற பிறகு நிர்க்கதியாகவுள்ள எமது மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற உந்துதல் எனக்குள் எழுந்தது. குறித்த காணியைப் பயன்படுத்தி ஏதாவது மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய மாதிரி விடயங்கள் செய்யவேண்டுமென நினைத்தேன். ஆனால் அதற்கு முதலீடு செய்ய பணம் பெரிய தடையாக  இருந்தது. 2012 ஓகஸ்ட் மாதம் தான் ஒரு பண்ணையை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்து காணியை சுற்றி வேலி அமைத்தோம். 2013 இல் ஏழு பால் மாடுகளை வாங்கினோம். மாடுகளின் மூலம் சிறிய வருமானத்தை பெற்று அதனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது தான் நோக்கமாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்தளவு பால் உற்பத்தியினை குறித்த மாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியவில்லை. நல்ல இன பால்மாடுகளை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அப்போது மாட்டை தொடர்ந்தும் வைத்திருக்கப் போகின்றோமா என்று யோசிக்க வேண்டி இருந்தது. 5 வருடங்கள் மாடுகளுடன் செலவழித்து விட்டோம். அதனால் பெரிதாக வருமானம் வரவில்லை. அடுத்த கட்டம் என்ன செய்வது என பணியாளர்களுடன் சேர்ந்து சிந்தித்தோம்.   



2015 நடுப்பகுதியில் ஆடுகளை வாங்கி வளர்ப்பது நல்லது என யோசித்து 10 ஆடுகளை வாங்கி வளர்த்துக் கொண்டு அதே நேரம் மாடுகளை பண்ணையில் இருந்து குறைத்துக் கொண்டு வந்து 2017 இல் மாடுகளை முற்றாக விற்று ஆட்டுப்பண்ணை அமைப்பது என முடிவெடுத்தோம். முதலில் ஏற்கனவே இருந்த பரண் முறையிலான ஆட்டுக் கொட்டகை ஒன்றை விலைபேசி வாங்கி கொண்டு வந்து  அமைத்தோம். அதோடு சேர்த்து 35 ஆடுகள் வரை வாங்கி சிறியதொரு ஆட்டுப் பண்ணையை அமைத்தோம். எங்களுடைய காலநிலைக்கு ஏற்ற கலப்பின ஆடுகளையே நாங்கள் அதிகம் வைத்திருக்கிறோம். தற்சமயம் 104 ஆடுகள் எங்களிடம் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்குள் 50 ஆடுகள் வரை நாங்கள் விற்றிருக்கின்றோம்.

அகத்தி, இப்பிலிப்பில், கிளிசரியா போன்ற மரங்களை அதிகளவு நடுகை செய்து வருகிறோம். இவை நிழல், குளிர்ச்சியை தருவதோடு ஆடுகளுக்கும் நல்ல தீவனமாகவும் விளங்குகின்றன. எங்களிடம் கிராமப் புறங்களில் உள்ள நாட்டு ஆடுகளே அதிகம் உள்ளன. ஜமுனாபாரி கலப்பினங்களையும் உருவாக்கி வருகின்றோம்.  இவ்வினங்கள் இனப்பெருக்கம் அதிகம் உள்ளவை. ஆடுகளை  வெளியில் கொண்டு போய் விவசாயம் செய்யப்படாத நிலங்களில் மேய்த்துக் கொண்டு வருகின்றோம். அதையும் விட எங்களது காணியிலும் குறிப்பிட்ட சதுர காணியாக தெரிவு செய்து அதனை சுற்றி கம்பி வேலி அமைத்து அதற்குள் CO3 வகையான புல்லுகளையும் நாட்டி தூறல் நீர்ப்பாசனம் செய்து அதற்குள் ஆட்டுக் குட்டிகளை மேய்ச்சலுக்காக விட்டு வருகின்றோம்.  அதில் நல்ல பலன்களை பெற கூடியதாக உள்ளது. பரந்த திறந்த வெளியில் ஆடுகளை உலவ விடுவதால் நோய் தொற்றுவதும் மிகக் குறைவாக உள்ளது. கோடை காலத்தில் உணவுற்பத்தி தான் எமக்கு பெரும் சவாலாக உள்ளது. முதலில் அதற்கான நீர்வளத்தை பெற்று புல்லு வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பை விஸ்தரிக்க உள்ளோம். எங்களது காணியின் வேலிகளை உயிர்வேலிகளாக அமைத்து வருகின்றோம். இதனால் பல நன்மைகள். ஒன்று பசுமையான சூழலை உருவாக்குகிறோம். ஆடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்கிறது. மற்றையது காற்றுத்தடுப்பு வேலிகளாகவும் இவை விளங்குகின்றன.



ஆடுவளர்ப்பு ஆரம்பித்து ஒரு சில வருடங்களே முடிந்துள்ளன. சந்தைவாய்ப்புக்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வருகின்றன. எங்களிடம் இருக்கின்ற ஆடுகள் ஒருவருட காலத்தில் 25 கிலோவில் இருந்து 30 கிலோவுக்குள் தான் வருகின்றன.    ஆனால், இதனையே 6 மாதத்துக்குள் 25 கிலோ உயிரெடை வரக் கூடியமாதிரி வளர்த்தால் இன்னும் விலையை குறைத்தும் கொடுக்க முடியும்.அதிக இலாபமும் சம்பாதிக்கலாம்.

ஆடுகளுக்கு வலிப்பு நோய் வந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்று முதலில் எங்களுக்கு தெரியாது. இப்படியான நோய்கள் வருவதற்கு உண்ணியும் ஒரு காரணம் . இயன்றளவு இயற்கை முறையில் இதற்கு தீர்வு காண முடியும் என பின்னர் அறிந்து கொண்டேன். மஞ்சள், தேங்காய் எண்ணெய், பூண்டு மூன்றையும் சேர்த்து ஆடுகளின் காதுகளில் பூசிவ ந்தால் உண்ணித்தாக்கம் குறையும்.

உள்ளி நல்லதொரு மருந்து. ஒரு ஆடுக்கு ஒரு பல்லு உள்ளி ஒவ்வொரு நாளும் கொடுத்து வந்தால் ஆடுகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அத்தோடு பல்வேறு நோய்களையும் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆடுகளுக்கு ஏற்படும் பூச்சித்தாக்கத்தை கட்டுப்படுத்த பூசணி விதை நல்ல மருந்தாகும். கத்தாழை நடுப்பகுதியும் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த கொடுக்க முடியும்.\



வளர்க்கிற மாதிரியான நல்ல இன ஆடுகளை கிலோ 750 - 1300 ரூபாய் வரைக்கும் கொடுக்கிறோம். சாதாரண ஆடுகளை 650 - 750 ரூபாய் வரையும் கொடுக்கின்றோம்.  இந்த வருடம் ஆடுகளை விற்பதன் மூலம் 20 இலட்ச்சம் ரூபாய் வருமானமாக ஈட்டலாம் என இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆட்டுப்பண்ணை சூழலை ஒரு பசுமை சூழலாக மாற்றி இதற்குள் ஓய்வு விடுதி ஒன்றையும் அமைத்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற இடமாக இதனை கொண்டு வந்தால் ஆட்டுப் பண்ணையும் மேலும் வளரும் சூழல் உருவாகும் என்றார்.

குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். ஆடுகளுக்கு வர இருக்கும் நோய்களுக்கும் நாம் முன்கூட்டியே இயற்கை முறையில் சிகிச்சையளித்து ஆரோக்கியமாக வளர்க்க முடியும். எங்கள் சூழலுக்கு ஏற்றதும் அதிக வருவாயை பெற்றுத் தரக் கூடியதுமான ஆடுவளர்ப்பை எம்மக்கள் அச்சமின்றி மேற்கொள்ளலாம். இதன் மூலம் கிராமிய பொருளாதாரம் நிச்சயம் உயரும்.

தொகுப்பு- துருவன்
நிமிர்வு யூலை 2018 இதழ்

வலம்புரியை பெரிதாக பிறின்ற் எடுத்த அஸ்மின் ஆதரவாளர்கள்!!

- No Comments
"மக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது? கருணாவுக்கு என்ன நடந்தது? அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது."





- இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஐ.அஸ்மின் தெரிவித்தார்.

இதனை செய்தியாக வெளியிட்ட வலம்புரி பத்திரிகை இப்படியான தவறுகளை நியாயப்படுத்தும் சுமந்திரன் முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் ஏற்றுக்கொள்வார் என தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வலம்புரி பத்திரிகையை பெரியதாக்கி பிறின்ற் எடுத்து எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் தெரிவித்த கருத்து இதுதான்:

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், அமைச்சரவை தொடர்பான சர்ச்சை எழுந்தது. இந்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எல்லா நேரத்திலும் சுறுசுறுப்பான - புத்திசாலித்தனமான (ஸ்மாட்டாக) இல்லாவிடினும் சிக்கல் நிறைந்த நேரங்களில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படும்.

அமைச்சரவை இல்லை. அமைச்சரவையின் தலைமையும் முதலமைச்சரும் பொறுப்புச் சொல்லுகின்ற சவைக்கு கட்டுபடுகின்ற நிலையில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. சவைக்கு கட்டுப்படாத, சவைக்குப் பொறுப்புச் சொல்லாத ஒரு முதலமைச்சர் எங்களுக்குத் தேவையா என்பது கேள்வி. அதனைச் சபை தீர்மானிக்கவேண்டும். அந்தத் தீர்மானத்தை நீங்கள் முன்வைக்கலாம். இந்த விடயத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகின்றோம்?

இரண்டு சந்தர்ப்பங்களில் சபை ஏகமனதாகத் தீர்மானம் எடுத்து முதலமைச்சருக்கு அறிவித்துள்ளது. தேநீர் கடையில் பேசுபவர்கள் கூட அமைச்சரவை நியமிக்கின்ற அதிகாரம் யாருக்கு இருக்கு என்று தெளிவாகச் சொல்கின்றார்கள்.

முதலமைச்சர்தான் அமைச்சர்கள் யார் என்பதை ஆளுநருக்கு அறிவிக்கவேண்டும். இது எல்லோருக்கும் தெரியும். காலம் கடத்தி ஒன்றும் நடக்கவில்லை என்று விடக் கூடிய பிழையான முன்னுதாரணத்தை நோக்கித்தான் முதலமைச்சர் சென்று கொண்டிருக்கின்றார்.

அப்படியாக இருந்தால் இந்தச் சபையின் விவாதத்தை இன்னொரு நிலைக்கு மாற்றுங்கள். இப்படி ஒன்று தேவை?

மக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது? கருணாவுக்கு என்ன நடந்தது? அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது. அப்படியான நிலைமையில் நீங்கள் (அவைத் தலைவர்) புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுங்கள்" - என்றார்.

இதன்போது அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், "புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுத்துத்தான் இந்த விடயத்தில் சமரசமான போக்கில் சென்று கொண்டிருக்கின்றேன்" - என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, சமரசமான போக்கு அல்ல சரணாகதி என்று குறிப்பிட்டார். அவைத் தலைவர் அதனை மறுதலித்தார்.

அமைச்சர் ஒருவரை நியமிக்கும் ஆலோசனையை நீங்கள் வழங்கலாமா? என்று அவைத் தலைவரிடம் அஸ்மின் கேள்வி எழுப்பினார். இல்லை என்று அவைத் தலைவர் பதிலளித்தார்.

"இந்தச் சபையின் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சருக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கின்றது. அவர் அதனைச் செய்யவில்லை என்றால் அடுத்தது என்ன? அந்தப் பரிந்துரையை மேற்கொள்ளக் கூடியவரை முதலமைச்சராக்குவதுதான்" என்று அஸ்மின் கூறினார்.

லம்போகனியில் வழி செல்ல கேட்டவரின் லம்போ நிலை!!

- No Comments
அண்டாவில் அமர்ந்து இருப்பவர் நடிகர் பிருத்விராஜின் தாயார் நடிகை மல்லிகா ஆவார். கேரள வெள்ளத்தில் காப்பாற்றப்படுகின்ற காட்சியே இதுவாகும்.


கடந்த இரண்டே ஆண்டுகளுக்கு முன்பு PWD துறை அமைச்சரிடம் "விலை உயர்ந்த என்னுடைய லம்போர்கினி காரை ஓட்டிச் செல்கிற அளவு க்கு மாநிலத்தின் சாலைகளின் தரம் சரியில்லை. சாலைகளை சீரமையுங்கள்" என்று கூறி மனு ஒன்று கொடுத்தார்.

உலகின் அதிக விலையுயர்ந்த காரில் பவனி வந்த நடிகை மல்லிகா அண்டாவில் அமர்ந்து பயணிப்பது சமூகத்திற்கு இறைவன் தருகிற மகத்தான படிப்பினையாகும்.

19 சீன, சிறிலங்கா இணையர்களுக்கு பிரமாண்ட திருமணம்

- No Comments
சீனா மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த 19 இணையர்கள் நீர்கொழும்பில் உள்ள ஆடம்பர விடுதியில் வியாழக்கிழமை பெரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர்.

12 சீன இணையர்களும், 7 சிறிலங்கா இணையர்களுக்குமே நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும், சிறிலங்காவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீனாவின் அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தின் பணியாளர்களாவர்.



 ‘அணை மற்றும் பாதை திட்டத்துக்காக ஒன்று கூடியுள்ளோம், நாங்கள் சிறிலங்காவில் திருமணம் செய்தோம்’ என்ற தொனிப் பொருளில் இந்த பிரமாண்ட திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பில் உள்ள சீனத் தூதரக அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி பாங் சுன்சூ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் 300 விருந்தினர்கள் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.



 இந்தப் புதிய திருமணங்கள் மூலம், சீன- சிறிலங்கா ஒத்துழைப்பு எதிர்காலத்தில் பிரகாசமாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்று நம்புவதாக சீனத் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி சுன்சூ தெரிவித்துள்ளார். மணமக்கள் அனைவரும் சீன கலாசார மரபுகளுக்கு அமைய சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் யார் யாருக்கு சலூட் அடிக்கவேண்டும்? ஒரு விபரம்!!

- No Comments
அரச விழாக்களில், அழைப்பிதழ்களில், திறப்பு கல்வெட்டுக்களில் பிரதிநிதிகளின் பதவி நிலை ஒழுங்கு வரிசைகள் எப்படி அமைந்திருக்கும், இதில் யாரை முற்படுத்துவது என்பது தொடர்பான குழப்பங்கள் விழாக்களை ஒழுங்குபடுத்துவர்களுக்கு இருக்கின்றன.
இலங்கைக்கான பதவி நிலை ஒழுங்கு வரிசைகள் அல்லது Protocol கள் பின்வருமாறு அமையும்.
President
Prime Minister
Speaker
Chief Justice
Leader of the Opposition
Cabinet Ministers
Governors of the Provinces
Provincial Chief Ministers
State Ministers
Deputy Speaker
Deputy Ministers
Deputy Chairman of the Committees
Chief Government Whip
Ambassadors and High Commissioners
UN Resident Representative
Members of the Constitutional Councils
Attorney – General
Supreme Court Judges
President of the Court of Appeal
Judges of the Court of Appeal
Members of the Parliament
Chairman of the Provincial Councils
Provincial Council Ministers
Provincial Leader of the Opposition
Members of the Provincial Councils
Secretary to the President
Secretary to the Prime Minister
Secretary to the Cabinet of Ministers
Governor of the Central Bank
Secretary General of the Parliament
Chairman of the Commissions
Advisors to the President
Deputy Secretary to the Treasury
Auditor General
Secretary General of the Constitutional Councils
Chairman of the University Grants Commission
VCs of the Universities
Secretary to the State Ministers
Additional Secretary to the President
Chief of Defence Staff
Commanders of the Army/Navy/Air Force
IGP
Solicitor General
High Court Judges
Visiting Sri Lankan High Commissioners
Additional Secretaries to the Prime Minister
Members of the Commissions
Additional Secretaries to the Ministries
District Secretary / GA
Secretaries to the Provincial Ministries
Chief of Protocol
Reps of UN Agencies
Head of the Government Departments
SL Overseas Service Officers – Grade I
Chairman of the State Enterprises
Foreign Consul Generals
Mayor and Chairman
Deputy Mayor/ Vice Chairman
Members of MC, UC and Pradesidhiya Sabas

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

- No Comments
ஆலய அமைப்பு : ஆஸ்திரேலியா சிட்னியில் வாழும் இதய வைத்திய நிபுணர் மனமோகன், சிவகௌரி தம்பதியரின் உபயமாகக் கிடைத்த நிலத்தில் அவர்களின் உபயமாக அமைக்கப்பட்ட கோவில் உயர்ந்து நிற்கிறது. கோவிலில் மூலவராகத் தட்சணாமூர்த்தி, அவர் முன்னால் நந்தியெம் பெருமான் அதற்கும் முன்னால் கற்றேர் அதில் சிவலிங்கத்துடன் மணிவாசகர் என அரண்மனை அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு மற்றும் மேற்குப் புறங்களில் அறுநூற்று ஐம்பத்தாறு திருவாசகப் பாடல்களும் கருங்கல்லில் மனிதவலுவினால் உளிகொண்டு செதுக்கப்பட்டுள்ளன.
ஆறு.திருமுருகன் சொற்பொழிவு ஒன்றிற்காக மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலை சென்றபோதே இக்கரு உதயமானது. திருமந்திரமும் திருவாகசமும் என்ற பொருளில் அவர் உரையாற்றியபோது அங்கிருந்த ஒரு சித்தர் திருமுருகனாரை ஆசீர்வதித்து “திருவாசகத்தை யாழ்ப்பாணத்தில் நீ காப்பாற்றுவாய். காற்று மழை நெருப்பு என எவையும் தீண்டாத வண்ணம் அதைப் பாதுகாக்கக் கூடிய பணியை மேற்கொள்ளக்கடவாய்” என்றாராம். டிஜிட்டல் யுகத்தில் திருவாகசத்தைக் காப்பாற்ற இணையம் உள்ளதுதானே எனப்பலரும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் எக்காலத்திலும் அழியாத ஒரு வடிவில் திருவாசகத்தைப் பேணும் முயற்சியாக திருவாசக அரண்மனை அமைக்கும் ஆணை மறைபொருளாக அந்தச் சித்தராலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

விமானம் உயர்ந்த கலைக்கோவில்
சோழர் காலக்கட்டடக் கலைக்கு ஒப்பாக தஞ்சைப் பெருங்கோவிலை நினைவுறுத்தும் வகையில் முப்பது அடி உயரத்தில் விமானம் நிமிர்ந்து நிற்கின்றது. அதில் சிவலிங்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மூலவராக தட்சணாமூர்த்தி காணப்படுகின்றார். இலங்கையில் கருவறையில் தட்சணாமூர்த்தி குடிகொள்ளும் முதற்கோவிலும் இதுதான். கருங்கல்லில் நான்கரை அடி உயரமுள்ளவராக இந்த ஞானகாரகன் விளங்குகின்றார்.
விமானத்தில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்ட கோவிற்சிறப்பும் இங்குள்ள தனித்துவங்களில் ஒன்று எனலாம். ஊரெழு சண்முகநாதனின் கைவண்ணமும் தென்னிந்தியச் சிற்பக் கலைஞர் புருஷோத்தமனின் கலைவண்ணமும் திருமுருகனாரின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்துள்ளன. இதைவிட நல்லுள்ளம் படைத்த சான்றோர் பலர் நிதி வழங்கி இக்காரியம் செயற்பட உதவியுள்ளனர். ஏறத்தாழ நானூறு இலட்சம் ரூபா மதிப்பில் பணிகள் இடம்பெற்றதாக மதிப்பிட முடிகின்றது.

செதுக்கப்பட்ட திருவாசகம் : கோவிலின் உட்பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு சுவர்களில் அறுநூற்று ஐம்பத்தாறு திருவாசகப் பாடல்களும் கருங்கற்களில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. பாரதிபுரத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞரான வினோத் என்ற கலைஞர் இந்த வரலாற்றுப் பணியைச் செய்துள்ளார். புகழுடற் சின்னங்களில் தம்கைவினையை வெளிப்படுத்திய தேர்ச்சி மிக்கவர். இன்று பக்திசார்ந்த வரலாற்றுப் பணியை மேற்கொண்டு பெருமை பெற்றுள்ளார். இதைவிடக் கிழக்கு மற்றும் மேற்குப் புற உட்பிரகாரத்தில் 108 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் 108 மணிகளும் காணப்படுகின்றன. அடியவர்கள் தங்கள் விருப்பப்படி அபிஷேகித்து ஆனந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.
இதைவிட வாயிலில் சிவபுராணத்தை கிரந்தம், சீனம், தங்கோலோ, சிங்களம் முதலிய பன்னிரண்டு மொழிகளில் மொழிபெயர்த்து முப்பது அடி நீளச்சுவரில் அமைத்துள்ளனர். கோவிலில் எவ்வேளையும் திருவாசகம் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலிப்பொறிமுறையையும் ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன் திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையம், யாத்திரிகர் தங்கும் அறை, பூசகர் அறை, களஞ்சிய சாலை, பாகசாலை எனக் கோவிலுக்குரிய இதர அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சைவாபிமானிகளின் பெருங்கனவொன்று நனவாகியிருக்கின்றது. உலக நாடுகளில் பைபிளை வெள்ளைக் கற்களில் பதித்துள்ளனர். திருக்குரானை மகா பாரதத்தை கற்களில் எழுதிப்பதிவு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். சைவபக்தி இலக்கியமாகிய திருவாசகத்தைக் கற்களில் எழுதிய சாதனை யாழ்ப்பாணத்திலேயே நிகழ்ந்திருக்கின்றது.





சிறிலங்காவில் டம்மி பொலிஸ்! சிக்குவது யார்?

- No Comments
போக்குவரத்துக்களால் ஏற்படும் விபத்துக்களில் முக்கியமானது வேகமான போக்குவரத்துக்களால் ஏற்படுவதாகவும் அதனை தடுப்பதற்கு டம்மி பொலிசாரை நிறுத்துவற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பொருத்தமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.





தாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை

- No Comments
தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும், திடீர் மழை வெள்ளத்தால் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. பிறகு, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிக ஆபத்தான மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியை சிறுவர்களின் நலம் குறித்த பதற்றத்தோடும், மீட்புப் பணியின் சாகசத் தன்மை குறித்த ஆச்சரியத்தோடு உலகம் உற்று நோக்கி வந்தது. ‘காட்டுப் பன்றிகள்’ என்று பெயரிடப்பட்ட இந்த சிறுவர் கால்பந்து அணி குகையில் தொலைந்து போனது முதல், மீட்கப்பட்டது வரையிலான 17 நாள் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இங்கே..

  எப்படிக் காணாமல் போனார்கள்?

 தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், அரசை உஷார் படுத்தியதை அடுத்து அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது. இப்படித்தான் மீட்பார்கள்…. அவர்கள் உள்ளே சென்றிருந்த நிலையில், திடீரெனப் பெய்த பெருமழையும், அதையடுத்து குகைக்குள் பாய்ந்த காட்டு வெள்ளமும் குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இந்த 13 பேர் அணி, ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் பின்னோக்கிச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால், வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர். இந்த குகை அமைப்பு ஒரு மலையின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருந்து சிறுவர்கள் சிக்கியுள்ள இடம் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் இருந்தது. சிறுவர்களோடு பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய விடியோ பதிவு ஒன்றும் வெளியானது, எல்லோருக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்தது. எனினும், குகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஒன்று சிறுவர்கள் முக்குளிக்கக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்கவேண்டும் அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் அறிவித்தது. அப்போதுதான் மீட்புப் பணி அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பதை உலகம் உணர்ந்தது. ஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர். நான்கு மாதமும் இப்படியே உணவும் மருந்தும் சப்ளை செய்து அவர்களை காத்திருக்கச் செய்யலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறை ஒரு முக்குளிக்கும் வீரர் குகைக்குள் சென்று திரும்புவது மிகக் கடினமான, ஆபத்தான, பல மணி நேரம் பிடிக்கும் பயணமாக இருந்தது. சிக்கிக் கொண்ட சிறுவர்களும், பயிற்சியாளரும் குகையில் இருந்து குடும்பத்தினருக்கு எழுதி அனுப்பிய கடிதங்கள் மனதை உருக்கின. தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.





  மீட்புத் திட்டம்

 இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர். குகையின் உள் பகுதி சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில இடங்கள் மிகவும் குறுகலானவை. ஒரு இடம் வெறும் 40 செ.மீ. அகலம் மட்டுமே உடையது. மீட்புப் பணியாளர்கள் தங்கள் காற்று உருளையையோடு அந்த இடங்களை நீந்திக் கடப்பது கடினம். எனவே, அவர்கள் தங்கள் உருளையை கழற்றி எடுத்துக் கொண்டுதான் அந்த இடங்களைக் கடக்க முடியும். இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

  முழு முகத்தையும் மூடும் கவசம்

 சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வரும் வகையிலும், ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கும் வகையிலும் மீட்புப் பணி திட்டமிடப்பட்டது. மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும். ஆனால் மீட்புப் பாதை என்பது வெறும் நீந்தும் வகையில் மட்டும் இல்லை. நடப்பது, பாறை ஏறுவது, சேற்றில் நடப்பது போன்றவற்றையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சேம்பர் ‘சி’ என்ற இடத்தை அடைந்த பிறகு அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு நடந்தே வந்துவிடலாம். அந்த இடத்தில்தான் மீட்புப் பணியாளர்கள் முகாம் அமைத்திருந்தனர். குகைக்குள் சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்தில் காற்றில் ஆக்சிஜன் விகிதம் வீழ்வது அச்சுறுத்துவதாக இருந்தது. சாதாரணமாக காற்றில் 21 சதவீத ஆக்சிஜன் இருக்கவேண்டும். ஆனால், குகைக்குள் 15 சதவீதம் வரை ஆக்சிஜன் அளவு வீழ்ந்தது. எனவே, மீட்புப் பணியாளர்கள் இதுவரை நூறு ஆக்சிஜன் உருளைகளை சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்துக்கு கடும் இடர்ப்பாடுகளுக்கு இடையில் கொண்டு சென்றுள்ளனர். அத்துடன், மீட்புப் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், ஒரு மருத்துவர் உள்ளிட்ட 4 முக்குளிக்கும் வீரர்கள் சிறுவர்களுக்குத் துணையாக குகைக்குள் சென்று தங்கிவிட்டனர்.

  மீட்பு

 ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் மீட்புப் பணியில் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தேவைப்படுகிறவர்களை உடனடியாக ஏற்றிச் செல்வதற்கு வசதியாக ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது. நான்கு பேர் மீட்கப்பட்டவுடன், காற்றுக்குடுவைகளை நிரப்புவதற்காகவும், அடுத்தகட்டத்தை திட்டமிடுவதற்காகவும், இரவு நேரத்தில் மீட்புப் பணி நிறுத்திவைக்கப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கிய இரண்டாவது நாள் மீட்புப் பணியும் வெற்றிகரமாகவே தொடர்ந்தது. ஆனால், இரண்டாவது நாள் மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களில் சிலர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களும் நலமுடனே இருப்பதாக பின்பு தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் யாரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. எனினும், செவ்வாய்க்கிழமை சில சிறுவர்கள் கண்ணாடி வழியாகத் தங்கள் பெற்றோரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.



  சீல்கள்

 செவ்வாய்க்கிழமை மூன்றாம் நாள் மீட்புப் பணியை உற்சாகத்தோடு தொடங்கியது தாய்லாந்தின் கடற்படை சீல் அணி. தொடக்கம் முதல் மீட்புப் பணியை ஒருங்கிணைத்ததும், முன்னணியில் நின்றதும் இந்த அணியே. கடல், வான், நிலப் பரப்புகளில் செயல்படும் உயர் திறன் வாய்ந்த அணிகளையே சீல் அணி என்பர். (SEAL என்ற ஆங்கிலச் சொல், SEA, AIR and LAND என்பதன் முதல் எழுத்துகளின் சுருக்கமே ஆகும்). மூன்றாம் நாள் மீட்புப் பணியை மேற்கொள்ள 19 தாய்லாந்து கடற்படை சீல் வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர். முதல் இரண்டு நாள்களைப் போல அல்லாமல் செவ்வாய்க்கிழமை மீட்புப்பணி நீண்ட நேரம் பிடிப்பதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததற்கும் மாறாக மிக விரைவிலேயே மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்தது. கால்பந்து அணியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோர் வெளியேறிய பிறகே, அவர்களுடன் தங்கியிருந்த மருத்துவர், கடற்படை வீரர்கள் உள்ளிட்ட நான்குபேர் கடைசியாக குகையை விட்டு வெளியேறினர்.

  படிப்பினை

 இயற்கையின் சிக்கலான குகை அமைப்பையும், ஆபத்தான மீட்புப் பணியையும் உலகம் வாய்பிளந்து பார்த்தது. அது மட்டுமல்ல, இடர் கால மீட்பு என்ற துறை படித்துக் கொள்வதற்கு இந்த சம்பவம் மிக அரிதான பாடங்களை அளித்தது. கண்டுபிடிக்கப்படும் வரை முதல் 9 நாள்கள் குகைக்கடியில் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம்பிக்கையும், உற்சாகமும் குறையாமல் காத்திருந்த சிறுவர் அணியின் மன உறுதி குறிப்பாக கவனிக்கப்பட்டது. உறுதியோடு இந்த அணியை காத்திருக்கச் செய்ததில் பயிற்சியாளர் ஏக்போலின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கணித்துள்ளனர். தேச, இன, நிற எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் இருந்து வந்த மீட்புப் பணியாளர்களின் உதவியும், எல்லை கடந்த மானுடத்தின் வாஞ்சையும், எதிர்பார்ப்பும் இந்த நெருக்கடிக்கு ஒரு மனிதாபிமானக் கோணத்தையும் அளித்தன.

கனடாவின் மார்க்கம் நகரத்தில் வன்னி வீதி Vanni Ave

- No Comments
கனடாவின் மார்க்கம் நகரத்தில் வாழும் தமிழர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் வீதி ஒன்றுக்கு வன்னி வீதி (Vanni Ave) என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்க்கம் நகரத்திற்கும் முல்லைத்தீவு நகரத்திற்குமான நட்புறவு உடன்படிக்கை ஒன்று செய்யப்பட்ட நிலையில் இவ்வீதி திறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.