header ads

News Ticker

Latest Posts

வெடிக்­காத குண்­டு­க­ளி­லி­ருந்து வெடித்த தக­வல்கள்

- 1 Comment
இரண்டாம் உலக யுத்த கால குண்டு ஒன்று ேஜர்மனிய நக­ரான லூட்­விக்ஸ்­பானில் கடந்த வாரம் கண்டு பிடிக்­கப்­பட்­டது. இந்த குண்டைச் செய­லி­ழக்கச் செய்­வ­தற்­காக அவ்­வூ­ரி­லுள்ள மக்கள் 18,500 பேரை அதி­கா­ரிகள் வெளி­யேற்­றி­னார்கள்.
கட்­டு­மானப் பணி­களில் ஈடு­பட்­டி­ருந்த தொழிலா­ளர்கள் சில­ரினால் இக் குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­பி­ர­தே­சத்தில் இரண்டாம் உலக யுத்­தத்தின் போது நேச நாடு­களின் வான் வழித் தாக்­கு­தல்­களின் போது வீசப்­பட்ட மேலும் வெடிக்­காத குண்­டுகள் இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது. சுமார் எழு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வீசப்­பட்­ட­தாக கணிக்­கப்­பட்டுள்ள இக்­குண்டு 1,100 இறாத்தல் நிறை­யு­டை­ய­தாகக் காணப்­பட்­டது. குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­படும் பொழுது குண்டு கண்டு பிடிக்கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து ஆயிரம் மீற்றர் சுற்­ற­ள­வுக்குள் (0.6 மைல்) உள்ளோர் காலை எட்டு மணிக்குள்(0600 GMT) வெளி­யேற வேண்­டு­மென நகர அதி­கா­ரிகள் உத்­த­ர­விட்­டார்கள். குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­ப­டு­வ­தற்கு ஆறு மணித்­தி­யா­லங்கள் செல­விட வேண்­டி­ய­தா­யிற்று.


கட்­டு­மானப் பணி­களின் போது இவ்­வாறு வெடிக்­காத குண்­டுகள் கண்­டு­ பி­டிக்­கப்­ப­டு­வது ஜேர்­மனில் அவ்­வப்­போது நடை­பெறும் ஒரு விட­யமே. இரண்டாம் உலக யுத்­தத்தின் போது நேச நாடுகள் எவ்­வ­ளவு மோச­மாக நாஸிகள் மீது குண்டு மாரி பொழிந்­தார்கள் என்­பதன் வர­லாற்றை இப்­படி அடிக்­கடி கண்­டு­பி­டிக்­கப்­படும் குண்­டுகள் பறை­சாற்­று­கின்­றன.
கடந்த ஆண்டு செப்ெ­டம்­பரில் ஃபிரேங்.ேபார்ட் நகரில் ஒரு பெரிய குண்டு கண்டு பிடிக்கப்­பட்ட போது 70,000 மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள். 1.8 டொன் நிறை­யு­டைய பூதாக­ர­மான அந்த பிரித்­தா­னிய குண்டு "புளொக்­பஸ்டர்' (BLOCKBUSTER) எனப் பெய­ரி­டப்­பட்­டது. அதே போன்று ஏப்­ர­லிலும் பேர்லின் புகை­யி­ரத நிலை­யத்­த­ருகே ஒரு பிரித்­தா­னிய குண்டு கண்டு பிடிக்­கப்­பட்டு மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள்.
பிற்­பகல் இரண்டு மணி­ய­ளவில் 'நல்ல செய்தி. குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்டு விட்­டது. மக்கள் வீடு­க­ளுக்குத் திரும்பி வரலாம்' என்ற செய்­தியை லூட்­விக்ஸ்பான் நகர சபை தன்­னு­டைய உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்­டரில் வெளி­யிட்­டது. அத்­துடன் அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வு­ட­னேயே ஒரு பலகை வண்­டியில் வைத்து கட்­டப்­பட்­டி­ருந்த துருப்­பி­டித்த குண்டின் படத்­தையும் வெளி­யிட்­டி­ருந்­தது.
இந்த குண்டு அமெ­ரிக்­கப்­ப­டை­க­ளினால் வீசப்­பட்­டி­ருக்­கலாம் என்று நம்­பப்­ப­டு­கின்­றது. ஒரு இலட்­சத்து 65 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட லூட்­விக்ஸ்பான் நகரம் தென்­மேற்கு ஜேர்­ம­னியில் ஃபிரேங்ேபார்ட் நக­ரத்­திற்கு 50 மைல் தொலைவில் உள்­ளது.
இரண்­டா­வது உலக யுத்தம் நடந்து எழு­பது ஆண்­டுகள் கடந்து விட்­டன. இன்­னமும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2000 டொன் வெடிக்­காத குண்­டுகள் ஜேர்மனிய மண்­ணி­லி­ருந்து கண்டு பிடிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­ன்றன என்றால் சற்று வியப்­ப­டை­யாமல் இருக்­க­மு­டி­ய­வில்லை.
 ஒரு வீட்டை விரி­வு­ப­டுத்­து­வது முதல், தேசிய புகை­யி­ரத அதி­கா­ர­ச­பை­யினால் ஒரு புகை­யி­ரத பாதை அமைப்­பது வரை எது­வா­னாலும் அந்த மண்­ணி­லி­ருந்து வெடிக்­காத வெடி­பொ­ருட்கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தென சான்று படுத்­தப்­பட வேண்டும். இரண்­டா­வது உலக யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­குதி பூரா­கவும் ஜேர்­ம­னியில் அமைதி நிலவி வரு­கின்ற போதும் ஜேர்­ம­னிய குண்டு அகற்றும் படைகள் தான் உல­கி­லேயே மிகச் சுறு­சு­றுப்­பாக இயங்கி வரு­ப­வையாகும். 2000 ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­வரை 11 தொழி­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இதில் மூவர் 2010 ஆம் ஆண்டு கொட்­டின்ஜென் நகர் சந்தைப் பகு­தியில் ஆயிரம் இறாத்தல் நிறை­யு­டைய ஒரே குண்­டினை செய­லி­ழக்கச் செய்யும் போது கொல்­லப்­பட்­டார்கள்.
1986 ஆம் ஆண்டு முதல் குண்டு செய­லி­ழப்புத் துறையில் பணி­யாற்றி வரும் ஹோர்ஸ்ட் ரெய்ன்ஹார்ட் இது பற்றி சமீ­பத்தில் குறிப்­பிட்ட போது '86 ஆம் ஆண்டு நான் இப்­ப­ணியை ஆரம்­பித்த போது 30 ஆண்­டுகள் கழிந்தும் நான் இப்­ப­ணி­யி­லேயே தொடர்ந்து இருப்பேன் என நினைக்­க­வே­யில்லை. மண்­ணுக்கு அடி­யிலே இன்­னமும் நிறைய குண்­டுகள் மறைந்து கிடக்­கின்­றன என்­பதை மக்கள் சாதா­ர­ண­மாக அறி­யா­தி­ருக்­கின்­றார்கள்" எனத் தெரி­வித்துள்ளார். அவர் சாதா­ர­ண­மாக ஆண்­டொன்­றுக்கு சுமார் 500 டொன் வெடிக்­காத குண்­டு­களை அகழ்ந்­தெ­டுப்­ப­துடன் இரண்டு வாரத்­திற்­கொரு முறை வெடிக்­காத வான்­வழிக் குண்டு ஒன்­றினை செய­லி­ழக்கச் செய்­கின்றார்.
இரண்­டா­வது உலக யுத்­தத்தின் போது 1940 -– 1945 காலப்­ப­கு­தியில் அமெ­ரிக்க மற்றும் பிரித்­தா­னிய வான்­ப­டைகள் 2.7 மில்­லியன் தொன் குண்­டு­களை ஐரோப்­பாவின் மேல் வீசின. இதில் அரை­வா­சிக்கும் அதி­க­மா­னவை ஜேர்­ம­னியின் மேல் வீசப்­பட்­டன. அச்சு நாடுகள் என எடுத்துக் கொண்டால், நேச நாடு­களின் படைகள் 3.4 மில்­லியன் தொன் குண்­டு­களை அச்சு நாடுகள் மேல் வீசின. இந்த குண்­டு­க­ளினால் 3 இலட்­சத்து 5 ஆயிரம் முதல் 6 இலட்சம் பேர் வரை­யி­லான ஜேர்­மா­னி­யர்­களும், 3 இலட்­சத்து 30 ஆயிரம் முதல் 5 இலட்சம் வரை­யி­லான ஜப்­பா­னி­யர்­களும் கொல்­லப்­பட்­டனர். அதே நேரம் அச்சு நாடு­களின் குண்டு வீச்­சுக்­க­ளினால் 60 ஆயி­ரத்து 595 பிரித்­தா­னி­யர்­களும், 67 ஆயி­ரத்து 78 பிரான்­ஸி­யரும் 5 இலட்­சத்­துக்கு அதி­க­மான சோவியத் மக்­களும் கொல்­லப்­பட்­டனர்.
ஆனால் வியட்நாம் யுத்­தத்தின் போது வீசப்­பட்ட குண்­டு­களின் எண்­ணிக்கை நம்மை அசர வைக்கும். வியட்நாம் யுத்தம் முடி­வுறும் வரை வியட்நாம், லாவோஸ், கம்­போ­டியா ஆகிய நாடு­களின் மீது அமெ­ரிக்கா வீசிய குண்­டு­களின் நிறை ஏழு மில்­லியன் தொன்­க­ளாகும். இது இரண்­டா­வது உலக யுத்­தத்தின் போது மொத்­த­மாக வீசிய குண்­டு­களைப் போல இரண்டு மடங்­காகும்.
1940 செப்ெ­டம்பர் ஏழாம் திகதி லஃப்ட்வேஃப் என்ற பெயரில் அழைக்­கப்­பட்ட ஜேர்­ம­னிய வான்­படை லண்டன் மீதும் ஏனைய முக்­கிய பிரித்­தா­னிய நக­ரங்கள் மீதும் ஈவி­ரக்­க­மற்ற குண்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யது. இதுவே இரண்டாம் உலக யுத்­தத்தின் போது நடத்­தப்­பட்ட முதல் குண்டு தாக்­குதல் ஆகும்.
இரண்­டா­வது உலக யுத்­தத்தின் போது குண்டு வீச்­சுத்­தாக்­கு­தல்­க­ளினால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டவை பின்வரும் நகரங்களாகும். அலெப்பொ (சிரியா) பேர்லின் (ஜேர்மனி) வார்ஸோ (போலந்து) ஹீரோஷிமா நாகசாகி (ஜப்பான்) காபுல் (ஆப்கானிஸ்தான்) ஸரஜயெவோ (பொஸ்னியா) டிரேஸ்டன் (ஜேர்மனி) மற்றும் பெய்ரூட் (லெபனான்)
இதில் அலெப்பொ (சிரியா) காபுல் (ஆப்கானிஸ்தான்) ஆகிய நகரங்கள் இன்றளவும் பிச்சினைக்குரிய நகரங்களாகவே இருப்பது அந்நகரங்களின் தலைவிதியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆயுதக் கலாசாரமும் சர்வாதிகாரிகளின் போக்குகளும் மனித குலத்தை எங்கே கொண்டு செல்கின்றன என்ற மௌனச் செய்தியைத்தான் இந்த வெடிக்காத குண்டுகள் விடுப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.

ஆடு வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மன்னார் உதயன்

- No Comments
ஆடு வளர்ப்பு என்பது எம் முன்னோர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வந்திருக்கிறது. வளர்த்த ஆட்டை விற்று முக்கிய பொருளாதார கடமைகளை நிறைவேற்றும் நிலைமையும் இருந்தது.  குடும்பத்தில் உள்ள அனைவருமே ஆடுவளர்ப்பில் அக்கறை செலுத்துவார்கள்.  ஆட்டுப்பால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிக் குடிக்கும் நிலை உள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மிக்கது என அறியப்பட்டது. ஆட்டிறைச்சிக்கு எம்மவர்கள் மத்தியில் என்றுமே தேவை குறைந்ததில்லை. அதுவும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஊருக்கு வர முதலே உறவினர்களிடம் “ஒரு நல்ல கிடாயா பார்த்து வாங்கி வீட்டை கட்டி வையுங்கோ! வருகிறோம்” என இரண்டு மாதங்களுக்கு முன்பே  சொல்லுகின்ற நிலையும் உள்ளது. இதன் மூலம் எங்கள் பிரதேசங்களில் ஆடுகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆட்டெருவும் உடனடியாக விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகும்.   

மன்னார் மாவட்டத்தின் பரப்பாக்கண்டல் பிரதேசத்தில் உள்ள காத்தான்குளம் கிராமசேவகர் பிரிவில் பிரதான வீதியில் இருந்து உள்ளே சென்றால் "நம்பிக்கை பண்ணை" எல்லோரையும் வரவேற்கின்றது. கட்டுக்கரை குளத்துக்கு அண்மையில் (சின்ன அடைப்பு துருசு) க்கு அண்மையாக இப்பண்ணை அமைந்துள்ளது. 

பெயருக்கு ஏற்றால் போல் குறித்த பண்ணை நமக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கின்றது. உதயன் என்பவர் இந்தப் பண்ணையை நிர்வகித்து வருகின்றார். கிறிஸ்தவ  தொண்டு நிறுவனம் ஒன்றும் இந்தப் பண்ணையின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

எதற்காக இப்படி ஒரு பண்ணை எனக் கேட்ட போது உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார் உதயன்.  தற்போது நம்பிக்கை பண்ணை அமைந்துள்ள ஏறக் குறைய 4 ஏக்கர் காணி என் அப்பா அன்பளிப்பாக எனக்கு தந்திருந்தால் .  2009 யுத்தம் முடிவுற்ற பிறகு நிர்க்கதியாகவுள்ள எமது மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற உந்துதல் எனக்குள் எழுந்தது. குறித்த காணியைப் பயன்படுத்தி ஏதாவது மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய மாதிரி விடயங்கள் செய்யவேண்டுமென நினைத்தேன். ஆனால் அதற்கு முதலீடு செய்ய பணம் பெரிய தடையாக  இருந்தது. 2012 ஓகஸ்ட் மாதம் தான் ஒரு பண்ணையை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்து காணியை சுற்றி வேலி அமைத்தோம். 2013 இல் ஏழு பால் மாடுகளை வாங்கினோம். மாடுகளின் மூலம் சிறிய வருமானத்தை பெற்று அதனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது தான் நோக்கமாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்தளவு பால் உற்பத்தியினை குறித்த மாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியவில்லை. நல்ல இன பால்மாடுகளை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அப்போது மாட்டை தொடர்ந்தும் வைத்திருக்கப் போகின்றோமா என்று யோசிக்க வேண்டி இருந்தது. 5 வருடங்கள் மாடுகளுடன் செலவழித்து விட்டோம். அதனால் பெரிதாக வருமானம் வரவில்லை. அடுத்த கட்டம் என்ன செய்வது என பணியாளர்களுடன் சேர்ந்து சிந்தித்தோம்.   2015 நடுப்பகுதியில் ஆடுகளை வாங்கி வளர்ப்பது நல்லது என யோசித்து 10 ஆடுகளை வாங்கி வளர்த்துக் கொண்டு அதே நேரம் மாடுகளை பண்ணையில் இருந்து குறைத்துக் கொண்டு வந்து 2017 இல் மாடுகளை முற்றாக விற்று ஆட்டுப்பண்ணை அமைப்பது என முடிவெடுத்தோம். முதலில் ஏற்கனவே இருந்த பரண் முறையிலான ஆட்டுக் கொட்டகை ஒன்றை விலைபேசி வாங்கி கொண்டு வந்து  அமைத்தோம். அதோடு சேர்த்து 35 ஆடுகள் வரை வாங்கி சிறியதொரு ஆட்டுப் பண்ணையை அமைத்தோம். எங்களுடைய காலநிலைக்கு ஏற்ற கலப்பின ஆடுகளையே நாங்கள் அதிகம் வைத்திருக்கிறோம். தற்சமயம் 104 ஆடுகள் எங்களிடம் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்குள் 50 ஆடுகள் வரை நாங்கள் விற்றிருக்கின்றோம்.

அகத்தி, இப்பிலிப்பில், கிளிசரியா போன்ற மரங்களை அதிகளவு நடுகை செய்து வருகிறோம். இவை நிழல், குளிர்ச்சியை தருவதோடு ஆடுகளுக்கும் நல்ல தீவனமாகவும் விளங்குகின்றன. எங்களிடம் கிராமப் புறங்களில் உள்ள நாட்டு ஆடுகளே அதிகம் உள்ளன. ஜமுனாபாரி கலப்பினங்களையும் உருவாக்கி வருகின்றோம்.  இவ்வினங்கள் இனப்பெருக்கம் அதிகம் உள்ளவை. ஆடுகளை  வெளியில் கொண்டு போய் விவசாயம் செய்யப்படாத நிலங்களில் மேய்த்துக் கொண்டு வருகின்றோம். அதையும் விட எங்களது காணியிலும் குறிப்பிட்ட சதுர காணியாக தெரிவு செய்து அதனை சுற்றி கம்பி வேலி அமைத்து அதற்குள் CO3 வகையான புல்லுகளையும் நாட்டி தூறல் நீர்ப்பாசனம் செய்து அதற்குள் ஆட்டுக் குட்டிகளை மேய்ச்சலுக்காக விட்டு வருகின்றோம்.  அதில் நல்ல பலன்களை பெற கூடியதாக உள்ளது. பரந்த திறந்த வெளியில் ஆடுகளை உலவ விடுவதால் நோய் தொற்றுவதும் மிகக் குறைவாக உள்ளது. கோடை காலத்தில் உணவுற்பத்தி தான் எமக்கு பெரும் சவாலாக உள்ளது. முதலில் அதற்கான நீர்வளத்தை பெற்று புல்லு வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பை விஸ்தரிக்க உள்ளோம். எங்களது காணியின் வேலிகளை உயிர்வேலிகளாக அமைத்து வருகின்றோம். இதனால் பல நன்மைகள். ஒன்று பசுமையான சூழலை உருவாக்குகிறோம். ஆடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்கிறது. மற்றையது காற்றுத்தடுப்பு வேலிகளாகவும் இவை விளங்குகின்றன.ஆடுவளர்ப்பு ஆரம்பித்து ஒரு சில வருடங்களே முடிந்துள்ளன. சந்தைவாய்ப்புக்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வருகின்றன. எங்களிடம் இருக்கின்ற ஆடுகள் ஒருவருட காலத்தில் 25 கிலோவில் இருந்து 30 கிலோவுக்குள் தான் வருகின்றன.    ஆனால், இதனையே 6 மாதத்துக்குள் 25 கிலோ உயிரெடை வரக் கூடியமாதிரி வளர்த்தால் இன்னும் விலையை குறைத்தும் கொடுக்க முடியும்.அதிக இலாபமும் சம்பாதிக்கலாம்.

ஆடுகளுக்கு வலிப்பு நோய் வந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்று முதலில் எங்களுக்கு தெரியாது. இப்படியான நோய்கள் வருவதற்கு உண்ணியும் ஒரு காரணம் . இயன்றளவு இயற்கை முறையில் இதற்கு தீர்வு காண முடியும் என பின்னர் அறிந்து கொண்டேன். மஞ்சள், தேங்காய் எண்ணெய், பூண்டு மூன்றையும் சேர்த்து ஆடுகளின் காதுகளில் பூசிவ ந்தால் உண்ணித்தாக்கம் குறையும்.

உள்ளி நல்லதொரு மருந்து. ஒரு ஆடுக்கு ஒரு பல்லு உள்ளி ஒவ்வொரு நாளும் கொடுத்து வந்தால் ஆடுகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அத்தோடு பல்வேறு நோய்களையும் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆடுகளுக்கு ஏற்படும் பூச்சித்தாக்கத்தை கட்டுப்படுத்த பூசணி விதை நல்ல மருந்தாகும். கத்தாழை நடுப்பகுதியும் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த கொடுக்க முடியும்.\வளர்க்கிற மாதிரியான நல்ல இன ஆடுகளை கிலோ 750 - 1300 ரூபாய் வரைக்கும் கொடுக்கிறோம். சாதாரண ஆடுகளை 650 - 750 ரூபாய் வரையும் கொடுக்கின்றோம்.  இந்த வருடம் ஆடுகளை விற்பதன் மூலம் 20 இலட்ச்சம் ரூபாய் வருமானமாக ஈட்டலாம் என இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆட்டுப்பண்ணை சூழலை ஒரு பசுமை சூழலாக மாற்றி இதற்குள் ஓய்வு விடுதி ஒன்றையும் அமைத்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற இடமாக இதனை கொண்டு வந்தால் ஆட்டுப் பண்ணையும் மேலும் வளரும் சூழல் உருவாகும் என்றார்.

குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். ஆடுகளுக்கு வர இருக்கும் நோய்களுக்கும் நாம் முன்கூட்டியே இயற்கை முறையில் சிகிச்சையளித்து ஆரோக்கியமாக வளர்க்க முடியும். எங்கள் சூழலுக்கு ஏற்றதும் அதிக வருவாயை பெற்றுத் தரக் கூடியதுமான ஆடுவளர்ப்பை எம்மக்கள் அச்சமின்றி மேற்கொள்ளலாம். இதன் மூலம் கிராமிய பொருளாதாரம் நிச்சயம் உயரும்.

தொகுப்பு- துருவன்
நிமிர்வு யூலை 2018 இதழ்

வலம்புரியை பெரிதாக பிறின்ற் எடுத்த அஸ்மின் ஆதரவாளர்கள்!!

- No Comments
"மக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது? கருணாவுக்கு என்ன நடந்தது? அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது."

- இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஐ.அஸ்மின் தெரிவித்தார்.

இதனை செய்தியாக வெளியிட்ட வலம்புரி பத்திரிகை இப்படியான தவறுகளை நியாயப்படுத்தும் சுமந்திரன் முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் ஏற்றுக்கொள்வார் என தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வலம்புரி பத்திரிகையை பெரியதாக்கி பிறின்ற் எடுத்து எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் தெரிவித்த கருத்து இதுதான்:

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், அமைச்சரவை தொடர்பான சர்ச்சை எழுந்தது. இந்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எல்லா நேரத்திலும் சுறுசுறுப்பான - புத்திசாலித்தனமான (ஸ்மாட்டாக) இல்லாவிடினும் சிக்கல் நிறைந்த நேரங்களில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படும்.

அமைச்சரவை இல்லை. அமைச்சரவையின் தலைமையும் முதலமைச்சரும் பொறுப்புச் சொல்லுகின்ற சவைக்கு கட்டுபடுகின்ற நிலையில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. சவைக்கு கட்டுப்படாத, சவைக்குப் பொறுப்புச் சொல்லாத ஒரு முதலமைச்சர் எங்களுக்குத் தேவையா என்பது கேள்வி. அதனைச் சபை தீர்மானிக்கவேண்டும். அந்தத் தீர்மானத்தை நீங்கள் முன்வைக்கலாம். இந்த விடயத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகின்றோம்?

இரண்டு சந்தர்ப்பங்களில் சபை ஏகமனதாகத் தீர்மானம் எடுத்து முதலமைச்சருக்கு அறிவித்துள்ளது. தேநீர் கடையில் பேசுபவர்கள் கூட அமைச்சரவை நியமிக்கின்ற அதிகாரம் யாருக்கு இருக்கு என்று தெளிவாகச் சொல்கின்றார்கள்.

முதலமைச்சர்தான் அமைச்சர்கள் யார் என்பதை ஆளுநருக்கு அறிவிக்கவேண்டும். இது எல்லோருக்கும் தெரியும். காலம் கடத்தி ஒன்றும் நடக்கவில்லை என்று விடக் கூடிய பிழையான முன்னுதாரணத்தை நோக்கித்தான் முதலமைச்சர் சென்று கொண்டிருக்கின்றார்.

அப்படியாக இருந்தால் இந்தச் சபையின் விவாதத்தை இன்னொரு நிலைக்கு மாற்றுங்கள். இப்படி ஒன்று தேவை?

மக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது? கருணாவுக்கு என்ன நடந்தது? அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது. அப்படியான நிலைமையில் நீங்கள் (அவைத் தலைவர்) புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுங்கள்" - என்றார்.

இதன்போது அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், "புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுத்துத்தான் இந்த விடயத்தில் சமரசமான போக்கில் சென்று கொண்டிருக்கின்றேன்" - என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, சமரசமான போக்கு அல்ல சரணாகதி என்று குறிப்பிட்டார். அவைத் தலைவர் அதனை மறுதலித்தார்.

அமைச்சர் ஒருவரை நியமிக்கும் ஆலோசனையை நீங்கள் வழங்கலாமா? என்று அவைத் தலைவரிடம் அஸ்மின் கேள்வி எழுப்பினார். இல்லை என்று அவைத் தலைவர் பதிலளித்தார்.

"இந்தச் சபையின் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சருக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கின்றது. அவர் அதனைச் செய்யவில்லை என்றால் அடுத்தது என்ன? அந்தப் பரிந்துரையை மேற்கொள்ளக் கூடியவரை முதலமைச்சராக்குவதுதான்" என்று அஸ்மின் கூறினார்.

லம்போகனியில் வழி செல்ல கேட்டவரின் லம்போ நிலை!!

- No Comments
அண்டாவில் அமர்ந்து இருப்பவர் நடிகர் பிருத்விராஜின் தாயார் நடிகை மல்லிகா ஆவார். கேரள வெள்ளத்தில் காப்பாற்றப்படுகின்ற காட்சியே இதுவாகும்.


கடந்த இரண்டே ஆண்டுகளுக்கு முன்பு PWD துறை அமைச்சரிடம் "விலை உயர்ந்த என்னுடைய லம்போர்கினி காரை ஓட்டிச் செல்கிற அளவு க்கு மாநிலத்தின் சாலைகளின் தரம் சரியில்லை. சாலைகளை சீரமையுங்கள்" என்று கூறி மனு ஒன்று கொடுத்தார்.

உலகின் அதிக விலையுயர்ந்த காரில் பவனி வந்த நடிகை மல்லிகா அண்டாவில் அமர்ந்து பயணிப்பது சமூகத்திற்கு இறைவன் தருகிற மகத்தான படிப்பினையாகும்.

வடக்கிலுள்ள தமிழர்கள் மிக குரூரமானவர்கள் - மகாவம்ச கதை சொன்ன பெரேரோ

- No Comments
யுத்தத்திற்குப் பின்னரான நிலையில் தீர்வின்றித் தொடரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிந்தனையும், மனமும் கட்டாயம் தேவைப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

20180820_180758-791904

ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

தொடர்ந்து செல்லும் பிரச்சினைக்கான தீர்வினை இங்கு வாழும் அனைத்து சமூகங்களினதும் இதயங்கள் தேடாவிட்டால், அதற்கு அப்பால் நாங்கள் நகர முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையேற்பட்டு விடும்.

நாட்டில் காணப்படுகின்ற பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதாயின் ஆரம்பமாக நாம் இதயத்தைத் திறக்க வேண்டும் மனம் திறந்தால் அதன் பின்னர் இயல்பாகவே அறிவு திறக்கும்.

எனவே அந்த அறிவைக் கொண்டு ஆக்கபூர்வமான முறையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டுவிட முடியும்.

தனிப்பட்ட வாழ்க்கையிலே ஏற்பட்ட சம்பவங்கள் சமாதான சகவாழ்வுக்கான இதயக் கதவுகளைத் திறக்கும் கருவிகளாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

எங்களுடைய சுய அனுபவங்டகளினூடாக மற்றவர்களுக்கு வாழ்க்கைப் பாடத்தை தெரியப்படுத்தலாம். எனது இளம் பராயத்தில் சுமார் 5 வயதிருக்கும் சிங்கள இலக்கண நூலில்' குமாரோதயா' எனும் துட்டுகெமுனு குமாரனின் வரலாற்று நூலை நான் அப்போது பெருஞ் சத்தமிட்டு வாசிப்பேன்.

அதிலே அவர் முடங்கிக் கொண்டு தூங்குகிறார். நீட்டி நிமிர்ந்து படு, என்று அவரது தாயார் விஹாரமகாதேவி சொன்னதும், எனக்கு அது இயலாது ஏனென்றால் வடக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள், தெற்கில் பெருங்கடலும் இருக்கிறது என்கிறார் துட்டகெமுனு.

நான் பெரியவனாகும் போது எனது தந்தையைப் போல் கோழையாக இருக்க மாட்டேன். வடக்கில் போய் தமிழர்களை அழிப்பேன். என்றவுடன் மகனே அப்படிச் செய்ய வேண்டாம் ஏனென்றால் வடக்கிலுள்ள தமிழர்கள் மிக குரூரமானவர்கள் என்று அவரது தாய் விஹாரமகாதேவி கூறுகிறார். இவ்வாறு தான் நாம் இளமைப் பருவத்தில் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் என்னுடைய தாயார் இந்தக் கதையை நான் வாசிக்கும்போது மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் எனக்குச் சொல்லி வைத்த விடயம் இவைகளை நம்ப வேண்டாம் என்பதுதான்.

உனது தந்தையின் மிக நெருக்கமான சிநேகிதர் ருத்ரா ராஜசிங்கம் ஐஜிபி யாக இருந்தவர். அவர் ஒரு தமிழர். என்றும் எனது தாயார் என்னை அரவணைத்து எனக்கு வழிகாட்டியிருக்கிறார்.

இதிலிருந்து ஒரு இனத்தவரை நாம் வெறுக்க முடியாது என்பது எனது வாழ்க்கைப் பாடமாக அமைந்திருந்தது. எனவே இத்தகைய சிந்தனைப் போக்குகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவரும் இதயத்தைத் திறந்து பேச வேண்டும். உண்மைகளைத்தான் உரத்துக் கூறவேண்டும் மாறாக புனைவுகளை அல்ல.

எனவேதான் இன நல்லிணக்கத்துக்காக சமாதான சகவாழ்வுக்காக இடம்பெற்ற எத்தனையோ தனிப்பட்ட அனுபவங்கள் இன்னமும் பேசப்படாமல் இருக்கின்றன.

அவற்றை நாம் வெளியுலகுக்கு கொண்டு வந்து சமாதானத்தின் வழி மூலமாக இதயக் கதவுகளைத் திறந்து அறிவாயுதத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமாகத் தீர்வு காணவேண்டும். அழிவுகளுக்கு முடிவு கட்டவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன, திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ன, சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் சாந்த பத்திரன,‪ பிரபல சிறுகதை எழுத்தாளர், திக்வெல்லை கமால் என பலரும் கலந்து கொண்டனர்.

19 சீன, சிறிலங்கா இணையர்களுக்கு பிரமாண்ட திருமணம்

- No Comments
சீனா மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த 19 இணையர்கள் நீர்கொழும்பில் உள்ள ஆடம்பர விடுதியில் வியாழக்கிழமை பெரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர்.

12 சீன இணையர்களும், 7 சிறிலங்கா இணையர்களுக்குமே நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும், சிறிலங்காவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீனாவின் அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தின் பணியாளர்களாவர். ‘அணை மற்றும் பாதை திட்டத்துக்காக ஒன்று கூடியுள்ளோம், நாங்கள் சிறிலங்காவில் திருமணம் செய்தோம்’ என்ற தொனிப் பொருளில் இந்த பிரமாண்ட திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பில் உள்ள சீனத் தூதரக அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி பாங் சுன்சூ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் 300 விருந்தினர்கள் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றனர். இந்தப் புதிய திருமணங்கள் மூலம், சீன- சிறிலங்கா ஒத்துழைப்பு எதிர்காலத்தில் பிரகாசமாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்று நம்புவதாக சீனத் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி சுன்சூ தெரிவித்துள்ளார். மணமக்கள் அனைவரும் சீன கலாசார மரபுகளுக்கு அமைய சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவா குழுவின் 25 படகுகளில் 300 பேருடன் பிறந்தநாள்!!

- No Comments
ஆவா குழுவை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்தநாளை இரண்டு அல்லது மூன்று இடங்களில் கொண்டாடுகின்றார்கள். சாவகச்சேரியில் சங்கானையில் சங்குபிட்டியில் என ஒவ்வொரு நாளில் ஒருவரின் பிறந்தநாளை வெவ்வேறு இடங்களில் கொண்டாடுகின்றார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோதே சயந்தன் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அண்மையில் ஒருவரின் பிறந்தநாளுக்காக 25 படகுகளை வாடகைக்கு அமர்த்தி யாழ்ப்பாணத்திற்கு அண்மையாக உள்ள தீவு ஒன்றில் 300 பேர் வரை கூடி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

பிறந்தநாளுக்கான கேக்குடன் வாளை குறுக்காக குத்தி கேக் வெட்டி படமெடுத்துள்ளனர்.எனவே இவற்றை இலகுவாக விசாரித்து இந்த பிரச்சனைக்குரியவர்களை கண்டுகொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்போது குறுக்கிட்ட இன்னொரு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்தப்பிரச்சனைக்கு உடனடியாக பொலிசாரால் தீர்வுகாணமுடியாது எனவும் ஆனால் அதிமேதகு ஜனாதிபதிக்கும் கௌரவ பிரதமர் அவர்களுக்கு தெரியப்படுத்தி தீர்வுகாணுமாறும் கேட்டுக்கொண்டார்.

SOURCE: TamiNaatham