header ads

News Ticker

"மக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது? கருணாவுக்கு என்ன நடந்தது? அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது."





- இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஐ.அஸ்மின் தெரிவித்தார்.

இதனை செய்தியாக வெளியிட்ட வலம்புரி பத்திரிகை இப்படியான தவறுகளை நியாயப்படுத்தும் சுமந்திரன் முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் ஏற்றுக்கொள்வார் என தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வலம்புரி பத்திரிகையை பெரியதாக்கி பிறின்ற் எடுத்து எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் தெரிவித்த கருத்து இதுதான்:

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், அமைச்சரவை தொடர்பான சர்ச்சை எழுந்தது. இந்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எல்லா நேரத்திலும் சுறுசுறுப்பான - புத்திசாலித்தனமான (ஸ்மாட்டாக) இல்லாவிடினும் சிக்கல் நிறைந்த நேரங்களில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படும்.

அமைச்சரவை இல்லை. அமைச்சரவையின் தலைமையும் முதலமைச்சரும் பொறுப்புச் சொல்லுகின்ற சவைக்கு கட்டுபடுகின்ற நிலையில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. சவைக்கு கட்டுப்படாத, சவைக்குப் பொறுப்புச் சொல்லாத ஒரு முதலமைச்சர் எங்களுக்குத் தேவையா என்பது கேள்வி. அதனைச் சபை தீர்மானிக்கவேண்டும். அந்தத் தீர்மானத்தை நீங்கள் முன்வைக்கலாம். இந்த விடயத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகின்றோம்?

இரண்டு சந்தர்ப்பங்களில் சபை ஏகமனதாகத் தீர்மானம் எடுத்து முதலமைச்சருக்கு அறிவித்துள்ளது. தேநீர் கடையில் பேசுபவர்கள் கூட அமைச்சரவை நியமிக்கின்ற அதிகாரம் யாருக்கு இருக்கு என்று தெளிவாகச் சொல்கின்றார்கள்.

முதலமைச்சர்தான் அமைச்சர்கள் யார் என்பதை ஆளுநருக்கு அறிவிக்கவேண்டும். இது எல்லோருக்கும் தெரியும். காலம் கடத்தி ஒன்றும் நடக்கவில்லை என்று விடக் கூடிய பிழையான முன்னுதாரணத்தை நோக்கித்தான் முதலமைச்சர் சென்று கொண்டிருக்கின்றார்.

அப்படியாக இருந்தால் இந்தச் சபையின் விவாதத்தை இன்னொரு நிலைக்கு மாற்றுங்கள். இப்படி ஒன்று தேவை?

மக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது? கருணாவுக்கு என்ன நடந்தது? அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது. அப்படியான நிலைமையில் நீங்கள் (அவைத் தலைவர்) புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுங்கள்" - என்றார்.

இதன்போது அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், "புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுத்துத்தான் இந்த விடயத்தில் சமரசமான போக்கில் சென்று கொண்டிருக்கின்றேன்" - என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, சமரசமான போக்கு அல்ல சரணாகதி என்று குறிப்பிட்டார். அவைத் தலைவர் அதனை மறுதலித்தார்.

அமைச்சர் ஒருவரை நியமிக்கும் ஆலோசனையை நீங்கள் வழங்கலாமா? என்று அவைத் தலைவரிடம் அஸ்மின் கேள்வி எழுப்பினார். இல்லை என்று அவைத் தலைவர் பதிலளித்தார்.

"இந்தச் சபையின் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சருக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கின்றது. அவர் அதனைச் செய்யவில்லை என்றால் அடுத்தது என்ன? அந்தப் பரிந்துரையை மேற்கொள்ளக் கூடியவரை முதலமைச்சராக்குவதுதான்" என்று அஸ்மின் கூறினார்.

No Comment to " வலம்புரியை பெரிதாக பிறின்ற் எடுத்த அஸ்மின் ஆதரவாளர்கள்!! "