header ads

News Ticker

இரண்டாம் உலக யுத்த கால குண்டு ஒன்று ேஜர்மனிய நக­ரான லூட்­விக்ஸ்­பானில் கடந்த வாரம் கண்டு பிடிக்­கப்­பட்­டது. இந்த குண்டைச் செய­லி­ழக்கச் செய்­வ­தற்­காக அவ்­வூ­ரி­லுள்ள மக்கள் 18,500 பேரை அதி­கா­ரிகள் வெளி­யேற்­றி­னார்கள்.
கட்­டு­மானப் பணி­களில் ஈடு­பட்­டி­ருந்த தொழிலா­ளர்கள் சில­ரினால் இக் குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­பி­ர­தே­சத்தில் இரண்டாம் உலக யுத்­தத்தின் போது நேச நாடு­களின் வான் வழித் தாக்­கு­தல்­களின் போது வீசப்­பட்ட மேலும் வெடிக்­காத குண்­டுகள் இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது. சுமார் எழு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வீசப்­பட்­ட­தாக கணிக்­கப்­பட்டுள்ள இக்­குண்டு 1,100 இறாத்தல் நிறை­யு­டை­ய­தாகக் காணப்­பட்­டது. குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­படும் பொழுது குண்டு கண்டு பிடிக்கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து ஆயிரம் மீற்றர் சுற்­ற­ள­வுக்குள் (0.6 மைல்) உள்ளோர் காலை எட்டு மணிக்குள்(0600 GMT) வெளி­யேற வேண்­டு­மென நகர அதி­கா­ரிகள் உத்­த­ர­விட்­டார்கள். குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­ப­டு­வ­தற்கு ஆறு மணித்­தி­யா­லங்கள் செல­விட வேண்­டி­ய­தா­யிற்று.


கட்­டு­மானப் பணி­களின் போது இவ்­வாறு வெடிக்­காத குண்­டுகள் கண்­டு­ பி­டிக்­கப்­ப­டு­வது ஜேர்­மனில் அவ்­வப்­போது நடை­பெறும் ஒரு விட­யமே. இரண்டாம் உலக யுத்­தத்தின் போது நேச நாடுகள் எவ்­வ­ளவு மோச­மாக நாஸிகள் மீது குண்டு மாரி பொழிந்­தார்கள் என்­பதன் வர­லாற்றை இப்­படி அடிக்­கடி கண்­டு­பி­டிக்­கப்­படும் குண்­டுகள் பறை­சாற்­று­கின்­றன.
கடந்த ஆண்டு செப்ெ­டம்­பரில் ஃபிரேங்.ேபார்ட் நகரில் ஒரு பெரிய குண்டு கண்டு பிடிக்கப்­பட்ட போது 70,000 மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள். 1.8 டொன் நிறை­யு­டைய பூதாக­ர­மான அந்த பிரித்­தா­னிய குண்டு "புளொக்­பஸ்டர்' (BLOCKBUSTER) எனப் பெய­ரி­டப்­பட்­டது. அதே போன்று ஏப்­ர­லிலும் பேர்லின் புகை­யி­ரத நிலை­யத்­த­ருகே ஒரு பிரித்­தா­னிய குண்டு கண்டு பிடிக்­கப்­பட்டு மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள்.
பிற்­பகல் இரண்டு மணி­ய­ளவில் 'நல்ல செய்தி. குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்டு விட்­டது. மக்கள் வீடு­க­ளுக்குத் திரும்பி வரலாம்' என்ற செய்­தியை லூட்­விக்ஸ்பான் நகர சபை தன்­னு­டைய உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்­டரில் வெளி­யிட்­டது. அத்­துடன் அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வு­ட­னேயே ஒரு பலகை வண்­டியில் வைத்து கட்­டப்­பட்­டி­ருந்த துருப்­பி­டித்த குண்டின் படத்­தையும் வெளி­யிட்­டி­ருந்­தது.
இந்த குண்டு அமெ­ரிக்­கப்­ப­டை­க­ளினால் வீசப்­பட்­டி­ருக்­கலாம் என்று நம்­பப்­ப­டு­கின்­றது. ஒரு இலட்­சத்து 65 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட லூட்­விக்ஸ்பான் நகரம் தென்­மேற்கு ஜேர்­ம­னியில் ஃபிரேங்ேபார்ட் நக­ரத்­திற்கு 50 மைல் தொலைவில் உள்­ளது.
இரண்­டா­வது உலக யுத்தம் நடந்து எழு­பது ஆண்­டுகள் கடந்து விட்­டன. இன்­னமும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2000 டொன் வெடிக்­காத குண்­டுகள் ஜேர்மனிய மண்­ணி­லி­ருந்து கண்டு பிடிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­ன்றன என்றால் சற்று வியப்­ப­டை­யாமல் இருக்­க­மு­டி­ய­வில்லை.
 ஒரு வீட்டை விரி­வு­ப­டுத்­து­வது முதல், தேசிய புகை­யி­ரத அதி­கா­ர­ச­பை­யினால் ஒரு புகை­யி­ரத பாதை அமைப்­பது வரை எது­வா­னாலும் அந்த மண்­ணி­லி­ருந்து வெடிக்­காத வெடி­பொ­ருட்கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தென சான்று படுத்­தப்­பட வேண்டும். இரண்­டா­வது உலக யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­குதி பூரா­கவும் ஜேர்­ம­னியில் அமைதி நிலவி வரு­கின்ற போதும் ஜேர்­ம­னிய குண்டு அகற்றும் படைகள் தான் உல­கி­லேயே மிகச் சுறு­சு­றுப்­பாக இயங்கி வரு­ப­வையாகும். 2000 ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­வரை 11 தொழி­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இதில் மூவர் 2010 ஆம் ஆண்டு கொட்­டின்ஜென் நகர் சந்தைப் பகு­தியில் ஆயிரம் இறாத்தல் நிறை­யு­டைய ஒரே குண்­டினை செய­லி­ழக்கச் செய்யும் போது கொல்­லப்­பட்­டார்கள்.
1986 ஆம் ஆண்டு முதல் குண்டு செய­லி­ழப்புத் துறையில் பணி­யாற்றி வரும் ஹோர்ஸ்ட் ரெய்ன்ஹார்ட் இது பற்றி சமீ­பத்தில் குறிப்­பிட்ட போது '86 ஆம் ஆண்டு நான் இப்­ப­ணியை ஆரம்­பித்த போது 30 ஆண்­டுகள் கழிந்தும் நான் இப்­ப­ணி­யி­லேயே தொடர்ந்து இருப்பேன் என நினைக்­க­வே­யில்லை. மண்­ணுக்கு அடி­யிலே இன்­னமும் நிறைய குண்­டுகள் மறைந்து கிடக்­கின்­றன என்­பதை மக்கள் சாதா­ர­ண­மாக அறி­யா­தி­ருக்­கின்­றார்கள்" எனத் தெரி­வித்துள்ளார். அவர் சாதா­ர­ண­மாக ஆண்­டொன்­றுக்கு சுமார் 500 டொன் வெடிக்­காத குண்­டு­களை அகழ்ந்­தெ­டுப்­ப­துடன் இரண்டு வாரத்­திற்­கொரு முறை வெடிக்­காத வான்­வழிக் குண்டு ஒன்­றினை செய­லி­ழக்கச் செய்­கின்றார்.
இரண்­டா­வது உலக யுத்­தத்தின் போது 1940 -– 1945 காலப்­ப­கு­தியில் அமெ­ரிக்க மற்றும் பிரித்­தா­னிய வான்­ப­டைகள் 2.7 மில்­லியன் தொன் குண்­டு­களை ஐரோப்­பாவின் மேல் வீசின. இதில் அரை­வா­சிக்கும் அதி­க­மா­னவை ஜேர்­ம­னியின் மேல் வீசப்­பட்­டன. அச்சு நாடுகள் என எடுத்துக் கொண்டால், நேச நாடு­களின் படைகள் 3.4 மில்­லியன் தொன் குண்­டு­களை அச்சு நாடுகள் மேல் வீசின. இந்த குண்­டு­க­ளினால் 3 இலட்­சத்து 5 ஆயிரம் முதல் 6 இலட்சம் பேர் வரை­யி­லான ஜேர்­மா­னி­யர்­களும், 3 இலட்­சத்து 30 ஆயிரம் முதல் 5 இலட்சம் வரை­யி­லான ஜப்­பா­னி­யர்­களும் கொல்­லப்­பட்­டனர். அதே நேரம் அச்சு நாடு­களின் குண்டு வீச்­சுக்­க­ளினால் 60 ஆயி­ரத்து 595 பிரித்­தா­னி­யர்­களும், 67 ஆயி­ரத்து 78 பிரான்­ஸி­யரும் 5 இலட்­சத்­துக்கு அதி­க­மான சோவியத் மக்­களும் கொல்­லப்­பட்­டனர்.
ஆனால் வியட்நாம் யுத்­தத்தின் போது வீசப்­பட்ட குண்­டு­களின் எண்­ணிக்கை நம்மை அசர வைக்கும். வியட்நாம் யுத்தம் முடி­வுறும் வரை வியட்நாம், லாவோஸ், கம்­போ­டியா ஆகிய நாடு­களின் மீது அமெ­ரிக்கா வீசிய குண்­டு­களின் நிறை ஏழு மில்­லியன் தொன்­க­ளாகும். இது இரண்­டா­வது உலக யுத்­தத்தின் போது மொத்­த­மாக வீசிய குண்­டு­களைப் போல இரண்டு மடங்­காகும்.
1940 செப்ெ­டம்பர் ஏழாம் திகதி லஃப்ட்வேஃப் என்ற பெயரில் அழைக்­கப்­பட்ட ஜேர்­ம­னிய வான்­படை லண்டன் மீதும் ஏனைய முக்­கிய பிரித்­தா­னிய நக­ரங்கள் மீதும் ஈவி­ரக்­க­மற்ற குண்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யது. இதுவே இரண்டாம் உலக யுத்­தத்தின் போது நடத்­தப்­பட்ட முதல் குண்டு தாக்­குதல் ஆகும்.
இரண்­டா­வது உலக யுத்­தத்தின் போது குண்டு வீச்­சுத்­தாக்­கு­தல்­க­ளினால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டவை பின்வரும் நகரங்களாகும். அலெப்பொ (சிரியா) பேர்லின் (ஜேர்மனி) வார்ஸோ (போலந்து) ஹீரோஷிமா நாகசாகி (ஜப்பான்) காபுல் (ஆப்கானிஸ்தான்) ஸரஜயெவோ (பொஸ்னியா) டிரேஸ்டன் (ஜேர்மனி) மற்றும் பெய்ரூட் (லெபனான்)
இதில் அலெப்பொ (சிரியா) காபுல் (ஆப்கானிஸ்தான்) ஆகிய நகரங்கள் இன்றளவும் பிச்சினைக்குரிய நகரங்களாகவே இருப்பது அந்நகரங்களின் தலைவிதியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆயுதக் கலாசாரமும் சர்வாதிகாரிகளின் போக்குகளும் மனித குலத்தை எங்கே கொண்டு செல்கின்றன என்ற மௌனச் செய்தியைத்தான் இந்த வெடிக்காத குண்டுகள் விடுப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.

No Comment to " வெடிக்­காத குண்­டு­க­ளி­லி­ருந்து வெடித்த தக­வல்கள் "