keerthy

அனைவரிடமும் நன்றாக பழகும் கீர்த்தி சுரேசிற்கு இப்படி ஒரு பழக்கம் உண்டா?


மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படம் ‘மகாநதி’. தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘யவடு சுப்பிரமணியம்’ படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இந்த திரைப்படத்தினை இயக்குகிறார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது.

சாவித்ரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. சாவித்ரியின் பாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு சென்றாலும், மேக் அப் போட மிகுந்த நேரம் செலவு செய்துவிடுகிறாராம்.

2 மணி நேரம் மேக்அப் போட எடுத்துக்கொள்வதால் பட குழுவினர் இவருக்காக காத்திருக்க வேண்டி இருக்கிறதாம். மேலும், இவர் அனைவரிடமும் நன்றாக தான் பழகுகிறாராம். அதில் பிரச்சனை இல்லை என்றாலும், மேக்அப் போட மிகுந்த நேரம் எடுத்து கொள்கிறாராம்.