desla

வானத்தில் சுற்றும் கார் பூமியில் மோதும் வாய்ப்பு உள்ளது – அமெரிக்க விஞ்ஞானிகள்


வானத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் டெஸ்லா கார் பூமியில் மோத வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

”பல்கான் ஹெவி” என்ற ரொக்கெட்டுடன் சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்றும் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அது அடைய 6 மாதம் ஆகும். தற்போது 300 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த கார் 2091ல் மீண்டும் பூமிக்கு அருகில் வரும். அப்போது பூமி மீது கண்டிப்பாக மோதும் என்று ஹன்னோ ரெயின், டேனியல் தாமயோ, டேவிட் வொக்ரோஹ்லி ஆகிய அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக தாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி கட்டுரையை நாசாவில் சமர்ப்பிக்க உள்ளனர். அதேசமயம் இது பூமி மீது மோத 6 சதவிகித வாய்ப்பு மட்டுமே உள்ளது எனவும், அதிகபட்சம் 3 வருடங்களுக்குள் மொத்தமாக நொறுங்கி உடையவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.