yoga-teacher-earned-15000_SECVPF

யோகா மூலம் 10 லட்சம் சம்பாதிக்கும் சீன சிறுவன்!


சீனாவை சேர்ந்த சன் சுஜாங் என்னும் சிறுவன் ஜோகா நிலையங்களில் ஜோகா கற்பித்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 7 வயதிலேயே ஜோகா கற்பித்து கொடுப்பது மட்டுமன்றி, இந்தியா மதிப்பில் ரூபா 10 லட்சத்தை இதன் மூலம் மாத வருமானமாக சம்பாதித்து வருகின்றார்.

சுஜாங் 2 வயது முதலே ஜோகா கற்று வந்ததாகவும், ஜோகாவில் அவரது திறமை கண்ட பலர் ஆசையினாலே அவரிடம் ஜோகா கற்று வருவதாகவும் கூறப்பட்டுகின்றது.

மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டிற்கு பின், சீனாவில் ஜோகா கலை வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஜோகா பயிற்சி மூலம் நோய்கள் பல குணமடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.