canada

மாற்றம் பெறுகிறது கனடா தேசிய கீதம்!


கனடாவின் தேசிய கீதத்தில் அமைந்துள்ள ஒரு சில வார்த்தைகளை மாற்றியமைக்க கனேடிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் தேசிய கீதத்தில் “Sons” என்ற வார்த்தை அமைந்துள்ளது. இந்த வார்த்தையானது ஆண்களை மட்டுமே குறித்து நிற்கின்றது. எனவே இந்த வார்த்தைக்கு பதிலாக “All of us command” என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த வார்த்தையானது எந்த பாலினத்தையும் குறிப்பிடாத பொதுவான வார்த்தையாக உள்ளதால் அனைத்து தரப்பில் இருந்தும் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கான மசோதா கனேடிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனடாவின் ஆளுனர் ஜெனரல் Julie Payette -யிடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் அவர் கையொப்பம் இட்ட பின்னர் கனடாவின் தேசிய கீதம் அதிகாரபூர்வமாக மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.