baby

தூக்கமின்மையால் ஆண்டுதோறும் 3,500 குழந்தைகள் இறப்பு


அமெரிக்காவில் தூக்கமின்மையால் ஆண்டுதோறும் 3,500 குழந்தைகள் இறப்பதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இதில் திடீர் நோய்பாதிப்பு இறப்பு அறிகுறி (SIDS), தற்செயல் மூச்சுத் திணறலினால் குழந்தைகள் இறப்பதும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இயக்குனர் பிரெண்டா பிட்ஸ்ஜெரால்ட் கூறியிருப்பதாவது:

1990களில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தூக்க விழிப்புணர்வு பிரசாரத்தால் தூக்கமின்மையினால் ஏற்படும் குழந்தைகள் இறப்புகள் குறைந்தன. ஆனால் 90களின் கடைசியில் அது மீண்டும் அதிகரிக்க தொடங்கியதுள்ளது. இதனால் ஆண்டு தோறும் 3,500 குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்” என்றார்.

இம்மையம் 2015ல் நடத்திய ஆய்வில் இதற்கு தாய்மார்கள் உறங்கும் நிலையே பாதுகாப்பற்றதாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

பாதுகாப்பற்ற தூக்கம் என்பது, குழந்தை தந்தையிடத்திலோ அல்லது தாயிடத்திலோ அவர்களது வயிற்றுப்பகுதியை ஒட்டி உறங்குவது தான். மென்மையான படுக்கைகளில் தலையணைகள், போர்வைகள், மரத் தொட்டில்கள், அடைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் தூங்கும் நிலைப்பாடுகள் என்பனவும் அடங்கும்.