vijayarmjpg

விஜய் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!


தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், தற்போது இப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. “விஜய்யின் 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது” என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் மற்றும் கலை இயக்குநராக சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ தகவலை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என தெரியவருகிறது.