eman

ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு


ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் கொல்லப்பட்டார்” என்று உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டும் ஹூதி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் மஸிரா தொலைக்காட்சி, அறிவித்துள்ளது.

சலேஹ்வின் பொது மக்கள் காங்கிரஸ் கட்சியும் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்துள்ளது.

தலையில் பலத்த காயத்துடன் இருக்கும் சலேஹ்வைப் போன்று தோற்றமளிப்பவரின் சடலம், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரை, சலேயின் ஆதரவாளர்கள் ஹூதி இயக்கத்துடன் இணைந்து ஏமனின் தற்போதைய அதிபர் அப்த்ரபுத் மன்சூர் ஹாதிக்கு எதிராக போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.