santhanam

சிவகார்த்திகேயன் – சந்தானம் நேரடி மோதல்


சிவகார்த்திகேயனுக்கும் சந்தானத்துக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். இந்த இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜைக்கு வெளியிட திட்டமிடப்பட்ட வேலைக்காரன் படம் டிசம்பர் 22 வெளிவரவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சந்தானத்தின் ‘சக்கப்போடு போடு ராஜா’ படமும் டிசம்பர் 22-ஆம் திகதி வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிவகார்த்திகேயனும் சந்தானமும் நேரடியாக மோத உள்ளனர்.

சந்தானம் படம் வெளிவருவது சிவகார்த்திகேயன் தரப்பை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.