201709141051346194_LG-V30-V30-plus-flagship-smartphones-prices-revealed_SECVPF

எல்ஜி V30 மற்றும் V30 பிளஸ் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்


பெர்லின் நகரில் நடைபெற்ற IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி V30 மற்றும் V30 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை தென்கொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 6.0 இன்ச் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட், 16 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, கிரிஸ்டல் கிளியர் லென்ஸ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உள்ளிட்ட வசதிகளை புதிய எல்ஜி V30 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த எல்ஜி UX 6.0+ இயங்குதளம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள புதிய யூசர் இன்டர்ஃபேஸ் குவால்காம் அகௌஸ்டிக் வாய்ஸ் வாய்ஸ் ரெக்கஃனீஷன், முக அங்கீகாரம் (face recognition) உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

தென் கொரியாவில் பதிய எல்ஜி V30 ஸ்மார்ட்போன் KRW 949,300 அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,800 என்றும் எல்ஜி V30 பிளஸ் KRW 998,800 அதாவது இந்திய மதிப்பில் ரூ.56,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவில் இந்த ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு செப்டம்பர் 20-ம் திகதி துவங்கி விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது.

எல்ஜி V30 ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கூகுள் டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் KRW 1000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.60க்கு வாங்கிட முடியும்.

எல்ஜி V30 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே
– 538 PPI, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
– அட்ரினோ 540 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி / எல்ஜி V30+ 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த எல்ஜி UX 6.0+
– 16 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.6 அப்ரேச்சர், டூயல்டோன் எல்இடி பிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
– கைரேகை ஸ்கேனர்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3,300 எம்ஏஎச் பேட்டரி
– குவால்காம் குவிக் சார்ஜ் 3.0
– வயர்லெஸ் சார்ஜிங்

மெட்டல் ஃபிரேம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படும் எல்ஜி V30 IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு உகந்த வகையில் 14 தர சான்றுகளை எல்ஜி V30 வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

புதிய எல்ஜி V30 ஸ்மார்ட்போன் ஔரா பிளாக், கிளவுட் சில்வர், மொரோக்கான் புளூ மற்றும் லேவென்டர் வைலட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. தற்சமயம் தென் கொரியாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் எல்ஜி V30 ஸ்மார்ட்போன்களின் இந்திய விற்பனை சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.